Skip to main content

“தமன்னா, காஜலை பார்த்து ஏமாந்துட்டோம்” - நிதி நிறுவனத்திடம் பணத்தை ஏமாந்த மக்கள்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

"We were deceived by watching Tamanna Kajal"; people who borrowed money from the company

 

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி சுமார் ரூபாய் 200 கோடிக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

 

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் என்ற நிறுவனம் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளைத் துவங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 முதல் 30% வரை வட்டி ஈட்டித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபட்டது கடந்த சில தினங்களுக்கு முன் தெரியவந்தது. இது தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ரூசோ கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், இதேபோல் ஹேஷ்பே என்ற நிறுவனம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எம்.எல்.எம் அடிப்படையில் ஆட்களைச் சேர்த்துவிட்டு கமிஷன் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக அந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 

மேலும், 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 300 நாட்களில் 3 லட்ச ரூபாயாக பணம் அதிகரிக்கும் என அந்நிறுவனம் உத்தரவாதம் அளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, நடிகைகள் காஜல், தமன்னா போன்றோரை அழைத்து விளம்பரம் செய்ததன் அடிப்படையில் நம்பி பணத்தை முதலீடு செய்ததாகவும் பணத்தை இழந்தவர்கள் பரிதாபமாகத் தெரிவிக்கின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளாவில் பொருளாதார நெருக்கடி? - உயர்நீதிமன்றம்

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

 High Court questioned Economic crisis in Kerala?

 

கேரளா மாநிலத்தில், கேரளா அரசின் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த நிதி நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு கடன் கொடுத்த வகையில் ரூ.900 கோடி பணம் இன்னும் திரும்ப வரவில்லை. இதனால், எங்களுடைய நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. எனவே, அந்த பணத்தை உடனே வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது. 

 

இது தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதனால், போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்திற்கு பண உதவி செய்ய முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது. 

 

இந்த பதில் மனுவை நேற்று (01-11-23) பரிசீலித்த உயர்நீதிமன்றம், கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உயர்நீதிமன்றம், ‘கேரள அரசின் விளக்கம் கேரளாவை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அரசின் இந்த விளக்கத்தை வைத்துத்தான் தேசிய அளவில் கேரளா குறித்து பேசப்படும். நிதி நிலைமை மோசமாக இருந்தால், கேரளாவின் பொருளாதார நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டிய நிலை வரும். அதற்கான உரிமை உயர்நீதிமன்றத்திற்கும் உண்டு. அரசு உத்தரவாதத்தை நம்பித் தான் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர். கேரளாவில் இந்த நிலை நீடித்தால் முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். எனவே, அரசு வேறு ஒரு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தது. 

 

 

Next Story

அவகாசம் கேட்டும் தராததால் குடும்பமே தற்கொலை; 2 பேர் கைது

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

incident due to debt problem; 2 arrested

 

கோவை அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

 

கோவை வடவள்ளி பகுதியில் இன்ஜினியரிங் டிசைனிங் பணியில் ஈடுபட்டு வந்த ராஜேஷ் என்பவர், அவருடைய மகள், அவருடைய தாயார், மனைவி உட்பட நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மற்றவர்கள் விஷம் குடித்தும் ராஜேஷ் தூக்கிடும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இரண்டு தினங்களுக்கு முன்பாகவே இக்குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து யாரும் வெளியே வராத நிலையில், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அருகில் இருப்பவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார், வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது நான்கு பேரும் உயிரிழந்து கிடந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்புலன்ஸ் மூலம் நான்கு பேர் உடல்களும் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஜெயபாரத், தீபக் என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கடனை திருப்பி தர அவகாசம் கேட்டும் அவகாசம் தராமல் மன உளைச்சல் ஏற்படுத்தியதே நான்கு பேர் தற்கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.