Skip to main content

தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்ன சொல்கிறது பிரசன்ன ஜோதிடம்

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டம் ஏப்ரல் 11-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி, தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, தமிழக சட்டப்பேரவையில் காலியாகவுள்ள 22-ல் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

 

prasana


இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும், மாநிலத்தில் உள்ள அதிமுக ஆட்சியை மாற்றி ஆட்சி பொறுப்பில் அமர வேண்டும்மென திமுகவும், ஆட்சி அதிகாரத்தை மத்தியிலும், மாநிலத்திலும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பாஜகவும், அதிமுகவும் தேர்தல் களத்தில் மோதுகின்றன.



தேர்தல் களத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என பல்வேறு கணிப்புகள், கருத்து கணிப்புகள் வெளியாகின. இந்நிலையில் பிரசன்ன ஜோதிடம் என்ன கூறுகிறது என அரசியல்வாதிகளின் ஜோதிடரான வேலூர் லோகேஷ் பாபுவிடம் பேசினோம், இவர் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தல், டிசம்பரில் நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து கணிப்பு வெளியிட்டிருந்தார்.



இந்த பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது. பா.ஜ.க., தலைமையிலான கூட்டணி, அதிகபட்சமாக 285 இடங்களை பிடிக்கும். பா.ஜ.க., அல்லாத கூட்டணியில் இருந்து, ஒரு சில கட்சிகள் வெளியேறும்; அந்த கட்சிகளின் ஆதரவோடு, மோடி தலைமையிலான ஆட்சி தொடரவே வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
 


தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி 20 இடங்களை கைப்பற்றும். மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., கூட்டணி 14 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது. மீதமள்ள 6 இடங்கள் இழுபறியாகவே இருக்கும் என்பதுதான், தற்போதைய நிலையாக இருக்கிறது. அதேபோல், தமிழக சட்டசபை இடைத்தேர்தலை பொறுத்தவரை, மொத்தமுள்ள 18 தொகுதிகளில்  10-க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, தற்போதைய ஆட்சியே தொடரும் வாய்ப்புதான் அதிகமாக காணப்படுகிறது என்றார்.
 


பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள்.
 


1. திருவள்ளூர், 2. அரக்கோணம், 3. தர்மபுரி, 4. கிருஷ்ணகிரி, 5. ஆரணி, 6. கள்ளக்குறிச்சி, 7. சேலம், 8. நாமக்கல், 9. திருப்பூர், 10. கோவை, 11. பொள்ளாச்சி, 12. கரூர், 13. நாகப்பட்டினம், 14. மதுரை, 15. தேனி, 16. திருநெல்வேலி, 17. வேலூர், 18. காஞ்சிபுரம், 19. கன்னியாகுமரி, 20. விழுப்புரம்.
 


தி.மு.க  கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள்.
 


1. வடசென்னை, 2. மத்திய சென்னை, 3. ஸ்ரீபெரும்புதூர், 4. திருவண்ணாமலை, 5. ஈரோடு, 6. திண்டுக்கல், 7. திருச்சி, 8. பெரம்பலூர், 9. சிதம்பரம், 10. மயிலாடுதுறை, 11. தஞ்சாவூர், 12. விருதுநகர், 13. தூத்துக்குடி, 14. புதுச்சேரி.


வெற்றி வாய்ப்பை கணிக்க முடியாத இழுபறி தொகுதிகள்?
 


1. தென் சென்னை, 2. ராமநாதபுரம், 3. நீலகிரி, 4. கடலூர், 5. தென்காசி, 6. சிவகங்கை.

தனியார் ஏஜென்சிகள், பத்திரிக்கை, தொலைக்காட்சி மீடியாக்கள் பல்லாயிரம் மக்களை சந்தித்து எடுத்த கருத்து கணிப்புகள் தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி 5 முதல் 7 இடங்களை மட்டும்மே பிடிக்கும், திமுக கூட்டணி 33 தொகுதிகள் வரை பிடிக்கும் என்கின்றன. ஆனால் ஜோதிடரோ, 20 தொகுதி அதிமுக - பாஜக கூட்டணி பிடிக்கும் என கணித்துள்ளார்.
 


மக்கள் முடிவா ? மகேசன் முடிவா என்பது மே 23-ம் தேதி தெரிந்துவிடும்.

 

 

சார்ந்த செய்திகள்