Published on 13/11/2021 | Edited on 13/11/2021

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தேர்தலையொட்டி உத்தரப்பிரதேச பாஜக சட்டமன்ற பொறுப்பாளருடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இந்தநிலையில் இன்று அமித்ஷாவும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வாரணாசியில் அகில பாரதிய ராஜ்யபாஷை சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமித் ஷா, நமது தாய் மொழியே நமது பெருமை எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமித்ஷா, "நான் குஜராத்தியைவிட இந்தியை அதிகம் நேசிக்கிறேன். நாம் நமது ராஜ்ய பாஷையை வலுப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளுடன் உங்கள் தாய்மொழியில் பேசுங்கள். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை, நமது தாய் மொழியே நமது பெருமை" எனக் கூறியுள்ளார்.