Skip to main content

2 மாநில சட்டப்பேரவை தேர்தல்... 18 மாநிலங்களில் இடைத்தேர்தல்... வாக்குப்பதிவு தொடக்கம்!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

நாடு முழுவதும் 2 மாநில சட்டசபை மற்றும் 18 மாநிலங்களில் உள்ள 53 தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 3239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டசபை தேர்தலில் 105 பெண்கள் உள்ளிட்ட 1169 வேட்படாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியின் காமராஜர் நகர் உள்ளிட்ட தொகுதிகளிலும், அசாம், ராஜஸ்தான், கேரளா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட 18 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க, சிவசேனா மற்றும் காங்-தேசியவாத காங் கூட்டணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஹரியாணாவில் காங்.,பாஜக இடையே போட்டி நிலவுகிறது.

 

சார்ந்த செய்திகள்