இன்றைய தொழில்நுட்ப உலகில் மக்கள் தங்கள் கருத்துக்களை எளிதில் வெளியிட ஒரு கருவியாக சமூகவலைத்தளங்கள் பார்க்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருப்பது வாட்ஸ்அப். ஆனால் இதில் பயனுள்ள விஷயங்களை தாண்டி தேவையில்லாத வெறுப்புணர்வை தூண்டக்கூடிய பொய் செய்திகள் தான் அதிகளவு பகிரப்படுகின்றன. இதனை இன்று வாட்ஸ்அப் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில் 'வாட்ஸ்அப்பில் அதிக அளவில் பொய் தகவல்களே பரப்பப்படுகின்றன. மக்களுக்காகவும், அவர்களின் தகவல் தொடர்புக்காகவும் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் சேவை தற்போது தவறான வழியில் பயன்படுத்தப்படுகின்றது. 1.5 பில்லியன் பயனீட்டார்கள் உள்ள வாட்ஸ்அப் செயலியில் மாதம் 20 லட்சம் போலி அக்கவுண்டுகள் தடை செய்ய படுகின்றன' என கூறியுள்ளார்.