Published on 18/05/2018 | Edited on 18/05/2018

கர்நாடகாவில் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ போபையாவை ஆளுநர் நியமித்துள்ளார். தற்காலிக சபாநாயகராக போபையாவை ஆளுநர் தேர்ந்தெடுத்ததற்கு காங்கிரஸ்-மஜத கூட்டணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது சிலமணி நேரத்திற்கு முன் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவின் மீதான விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு சிறப்பு அமர்வின் மூலம் விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.