பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி "பஞ்சாப் நேஷ்னல் வங்கியிடம்" இருந்து சுமார் ரூபாய் 13,000 கோடி கடன் பெற்றுக்கொண்டு வங்கியை ஏமாற்றிவிட்டு லண்டன் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் இவரின் ரூபாய் 6000 கோடி மதிப்பிழான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. முதற்கட்டமாக நிரவ் மோடியிடம் உள்ள 13 சொகுசு கார்களை ஏலத்தில் விட மும்பை சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. இதனால் நிரவ்மோடி வைத்திருந்த ( Rolls Royce Ghost, Porsche Panamera , Mercedes Benz , Honda Cars , Toyoto Fortuner , Toyoto Innova , Honda Brios and Others ). இந்த கார்களை ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை பரிசோதிக்கப்பட்ட நிலையில் , கார்களை இயக்க அனுமதி அளிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து 13 கார்களின் புகைப்படங்கள் மற்றும் காரின் தொடக்க விலைகள் , கார்களின் எண்கள் உள்ளிட்டவை "Metal Scrap Trade Corporation Limited" என்ற நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டது. இந்த நிறுவனம் கார்களை விற்று பெறப்பட்ட தொகையை சமந்தப்பட்ட வங்கிகளுக்கு இந்த நிறுவனம் அளிக்கும் , இது தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறைக்கு அனுப்பவும் , இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் மும்பையில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் நிரவ்மோடியிடம் இருந்த ஓவியங்கள் வருமான வரித்துறையால் ஏலம் விடப்பட்டுள்ளனர். அதே போல் ரோல் ராய்ஸ் காரின் விலை ரூபாய் 5 கோடி ஆகும். ஆனால் நிரவ்மோடியின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் தொடக்க விலையாக ரூபாய் 1.3 கோடியை நிர்ணயித்து ஏலம் விடப்பட்டது.
இத்தகைய ஏலம் விடப்பட்ட தொகையை சமந்தப்பட்ட வங்கிகள் பெற்றுக்கொள்ளும். இது தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். இந்நிலையில் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியிடம் நிரவ்மோடி பெற்ற கடன் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிரவ்மோடி பண மோசடி செய்தது நிரூப்பிக்கப்பட்டதால் சிறைத்தண்டனை அளித்தது. ஆனால் மீண்டும் ஜாமீன் கோரி லண்டன் நீதிமன்றத்தில் நிரவ்மோடி மனுவை தாக்கல் செய்தார். ஆனால் இவரின் மனுவை தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம். மேலும் இந்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் நிரவ்மோடியை இந்தியா அழைத்து வர அனுமதி கோரி மனுவை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.சந்தோஷ், சேலம்.