Published on 20/02/2021 | Edited on 20/02/2021

இன்று (20.02.2021) பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆறாவது நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பு செய்யவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நடைபெற இருக்கும் ஆறாவது நிதி ஆயோக் கூட்டத்தில் விவசாயம், உள்கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.