இந்தியாவில் "டிக் டாக்" மற்றும் "ஹலோ" மொபைல் ஆப்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றன. இந்த வகை செயலிகளை தவறான முறையில் சிலர் பயன்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வகை ஆப்-களால் உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் டிக் டாக், ஹலோ ஆப்களை தடை செய்ய பரிசீலித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இந்த வகை ஆப்களை உறுதியாக தடை செய்யப்படும் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு, டிக் டாக் மற்றும் ஹலோ மொபைல் ஆப்கள் குறித்து புகார் கடிதம் அனுப்பியிருந்தது. அந்த கடிதத்தில் டிக் டாக், ஹலோ ஆகிய செல்போன் ஆப்கள் தேச விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியது. அதனைத் தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு துறை அமைச்சகம் டிக் டாக் மற்றும் ஹலோ மொபைல் ஆப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் 24 கேள்விகள் அடங்கிய அந்த கடிதத்திற்கு, ஜூலை 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது. பதிலளிக்க தவறும் பட்சத்தில், மொபைல் ஆப்-களை மத்திய அரசு தடை செய்யும் என நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.