டெல்லி திகார் சிறையில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை கட்டுப்படுத்த தமிழ்நாடு சிறப்பு படை போலிஸார் தடியடி நடத்தினார்கள். இந்த தடியாடியால் 15 கைதிகள் படுகாயம் அடைந்தனர். பின்னர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் மனித உரிமையை மீறி கைதிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அந்த அமர்வில் ஆம் ஆத்மி அரசின் விளக்கத்தை கேட்டு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதேபோல சிறைத்துறை இயக்குநர், தமிழ்நாடு சிறப்பு படை, அதன் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். இந்த தடியடி தொடர்பாக அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.