கேரளா மாநிலம் கோழிக்கோடு இாிஞ்சிபாலம் பகுதியை சோ்ந்த காதலா்கள் பிரேமன் (27) சாந்த்ரா (25) வேறு வேறு சமுதாயத்தை சோ்ந்த இருவரும் சிறுவயதில் நண்பா்களாக பழகி பின்னா் காதலரனாா்கள். ஆனால் இவா்களுடைய காதலை இரு வீட்டாா்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் பெற்றோா்கள் சம்மதத்துக்காக 7 ஆண்டுகளாக போராடி வந்தனா். அந்த போராட்டத்தின் பலனாக ஒரு கட்டத்தில் இரு வீட்டாரும் அவா்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி சொந்த பந்தங்களே அசந்து போகும் அளவுக்கு இவா்களின் திருமணத்தை நடத்த பெற்றோா்கள் முடிவு செய்தியிருந்தனா்.

இதற்காக 2018 மே மாதம் திருமணத்துக்கு முடிவு செய்து அழைப்பிதழும் அடித்து உறவினா்களும் நண்பா்களும் கொடுத்தனா். அந்த நேரத்தில் கேரளாவை புரட்டி எடுத்தது நிபா எனும் வைரஸ் நோய். இதனால் திருமணத்தை நிறுத்தி விட்டு 2019-ல் ஓணத்தில் நடத்த முடிவு செய்தனா். இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினா் ஈடுபட்டனா். இந்தநிலையில் தான் அப்போது பெய்த கன மழையால் கேரளா முமுவதும் வெள்ளத்தில் மிதந்தது. இதிலேயும் அவா்களின் திருமணம் தள்ளி போனது.
அடுத்ததாக 2020 மாா்ச் 22-ல் திருமணம் நடத்த நாள் குறித்து அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடத்தி வந்தனா். திருமணத்தன்று 2000 போ் கலந்து கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் நடந்து வந்தன. பெற்றோா்கள் சம்மதத்துடன் நடக்க இருக்கும் காதல் திருமணம் இரண்டு முறை இயற்கையின் சீற்றத்தால் தள்ளி போனதால் மூன்றாவது முறை எப்படியும் நடந்து தீரும் என்ற கனவில் மிதந்த அந்த காதலா்களின் சந்தோஷத்தை கலைக்கும் விதமாக வந்து விழுந்தது கரோனா வைரஸ்.
இந்தியாவில் அதிகம் பாதித்த இரண்டாவது மாநிலமான கேரளாவில் மக்கள் ஒடி ஒழித்து கொண்டியிருக்கிறாா்கள். இந்த சூழலில் தான் பிரேமன்-சாந்த்ரா காதலா்களின் திருமணம் இப்போதும் கனவாகி போய் விட்டது. அது குறித்து அந்த காதலா்கள் கூறும் போது.... கரோனா தாக்குதலில் இருந்து மக்கள் காப்பாற்ற பட்டாலே போதும் இப்போது எங்களுக்கு அதுதான் முக்கியமாக உள்ளது. ஏதோ நல்லதுக்கு வேண்டி தான் எங்கள் திருமணம் தள்ளி போகிறது என்று தான் நினைக்கிறோம். அடுத்து செப்டம்பா் மாதத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனா்.