Published on 20/02/2019 | Edited on 20/02/2019
இன்று காலை டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் மிதமான அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. கிர்கிஸ்தான் முதல் பல ஆசிய நாடுகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு உணரப்பட்டது. 20 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இதனால் உயிர்சேதங்களோ, பெருமளவு பொருள் சேதங்களோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.