Skip to main content

"நல்ல வேளை அமித்ஷா நீதிபதியாக இல்லை... இருந்திருந்தால்.." - கபில்சிபில் தடாலடி!

Published on 13/12/2019 | Edited on 14/12/2019


குடியுரிமை திருத்த மசோதா பற்றி கருத்து தெரிவித்துள்ள கபில் சிபல், " குடியுரிமை மசோதா அரசியல் அமைப்பிற்கு எதிரானது. அந்த சட்ட திருத்த மசோதா செல்லுமா, செல்லாதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை செல்லும் என கூறினால், நல்ல வேளையாக அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இல்லை. ஒரு வேளை நீதிபதியாக இருந்திருந்தால் செல்லாத இந்த மசோதாவை செல்லும் என கூறி இருப்பார்.



மஹாராஷ்டிராவில் குறைந்தபட்ச பொது திட்டத்தின் அடிப்படையிலேயே சிவசேனாவுடன் கூட்டணி வைத்துள்ளோம். எங்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாங்கள் அவர்களை வற்புறுத்தவில்லை. இந்த மசோதாவை சிவசேனா ஆதரிக்கவில்லை. ஓட்டெடுப்பின் போது ராஜ்யசபாவில் அவர்கள் இல்லை. ஒருவேளை அவர்கள் இருந்திருந்து அதனை எதிர்ப்பதற்கும், வெளிநடப்பு செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை" என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்