பாலியல் தொழில் செய்பவர்களையும், அவரது குழந்தைகளையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். குடிமக்களை போல பாலியல் தொழிலாளர்களையும் காவல்துறையினர் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
விருப்பம் இல்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களின் நல்வாழ்வுக்கென தங்கும் முகாம்கள் அமைக்கவும், பாலியல் தொழிலாளிகளுக்கு இருக்கக் கூடிய சட்ட பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.