Skip to main content

ராமர் பாலம் விவகாரம்... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு...

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

தமிழ் நாட்டின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. 30 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சுண்ணாம்பு பாறைகளால் ஆன பாலம் போன்ற அமைப்பை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

supreme court order on rama sethu

 

 

இந்துக்களின் அடையாளமாகவும், நம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் இருப்பதால் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் ஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2018ம் ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. எனினும், அதன்பின் வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்ததால், இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே முன்பு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று முறையிட்டார். இதனையடுத்து இந்த விவாகரத்தில் மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்