Skip to main content

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்..கல்லூரி கேட்டை மூடிய முதல்வர் - கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சை!

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

karnataka

 

கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில், இஸ்லாமிய பெண்கள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இந்தநிலையில் உடுப்பியின் குந்தாப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரி, ஹிஜாப் அணிந்து மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. கடந்த புதன்கிழமையன்று சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வந்துள்ளனர். அதற்கு எதிர்வினையாக 100 மாணவர்கள் காவி சால்வை அணிந்து வகுப்பிற்கு வந்துள்ளனர்.

 

இதனையடுத்து குந்தாப்பூர் எம்.எல்.ஏ.வுடன் ஆலோசனை நடத்திய கல்லூரி நிர்வாகம், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளது. இந்தநிலையில் சமூகவலைதளங்களில் ஹிஜாப் அணிந்து கல்லூரி வந்த இஸ்லாமிய பெண்கள், வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

அந்த வீடியோவில் ஹிஜாப் அணிந்து கல்லூரி வந்த இஸ்லாமிய பெண்கள், தங்கள் கல்லூரி முதல்வரிடம் ஹிஜாப்போடு தங்களை வகுப்பில் அனுமதிக்குமாறு கெஞ்சுகின்றனர். மேலும் அந்த மாணவிகள், இரண்டு மாதங்களில் தேர்வு இருப்பதாகவும், தற்போது ஏன் கல்லூரி,  ஹிஜாப் அணிவதில் பிரச்னையை எழுப்புகிறது எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்