Published on 06/06/2023 | Edited on 06/06/2023

சாலையில் கொட்டிய மது பாட்டில்களை மக்கள் பெட்டி பெட்டியாக அள்ளிச் சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே அனையபள்ளி பகுதியை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் லாரியில் இருந்த மதுபாட்டில்கள் சாலையில் கொட்டியது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் போட்டி போட்டுக்கொண்டு மது பாட்டில்களை பெட்டி பெட்டியாக தூக்கிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.