தேவையற்ற அழைப்புகள் அதாவது ஸ்பேம் கால்ஸ்... இது கஸ்டமர் கேர் கால்கள், லோன், இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நமக்கு தேவையில்லாத அழைப்புகள் அனைத்தும் ஸ்பேம் கால்கள்தான்.
அண்மையில் ட்ரூ காலர் (true caller) ஆப் நடத்திய ஆய்வில் 2018ம் ஆண்டில் அதிக தேவையற்ற அழைப்புகளை சந்திக்கும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. 2018 ஜனவரி முதல் அக்டோபர் வரை செல்ஃபோன் பயனாளர்கள் தங்களுக்கு வரும் அழைப்புகளில் இது தேவையற்றது, இது ஸ்பேம் கால் என குறித்து வைத்திருந்த பட்டியலை வைத்தும், தாங்கள் ஏற்கனவே வைத்திருந்த பட்டியலை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சராசரி இந்தியர் ஒரு மாதத்தில் 22 தேவையற்ற அழைப்புகளை சந்திப்பதாகவும், இதில் 91% வாடிக்கையாளர் தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்தும், 7% சூழ்ச்சி அழைப்பாளிகள் எனப்படும் ஸ்பேம் காலர்களிடமிருந்தும், 2% டெலி மார்கெட்டிங் நபர்களிடமிருந்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான குறுந்தகவல்கள் ட்ராய் விதிக்குட்பட்டே அனுப்பப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ட்ராய்-இன் ‘டூ நாட் டிஸ்டர்ப்’ என்ற ஆப்-ஐ பயன்படுத்தி அதை தவிர்க்கலாம். ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர் இதை செய்வதில்லை. அப்படி இருக்கையில் அந்த அழைப்புகளை எப்படி தேவையற்ற அழைப்புகள் என்று சொல்லமுடியும் என்று தொலைதொடர்பு நிறுவன சங்கத் தலைவர் ராஜன் எஸ் மேத்யூஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை செல்போன் பயனாளிகள் தங்களுக்கு வரும் அடையாளம் தெரியாத அழைப்புகளை தேவையற்றது என்று மார்க் செய்ததை வைத்தும், தாங்கள் வைத்திருக்கும் பட்டியலை வைத்தும் தான் இந்த ஆய்வை மேற்கொண்டதாக ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா இந்த இடத்தை பெற்றிருப்பது அதிர்ச்சிகொள்ள செய்கிறது என பலதரப்பினரும் இந்த பட்டியலில் 37.5% பிரேசில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.