Published on 15/11/2019 | Edited on 16/11/2019
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்து மகாசபை அலுவலகத்தில், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் நினைவுதினம் (தூக்கிலிடப்பட்ட நாள் நவம்பர் 15, 1949) கடைப்பிடிக்கப்பட்டது. மகாசபை உறுப்பினர்கள் கோட்சே மற்றும் அவனது கூட்டாளி நாராயண் ஆப்தே படங்களுக்கு ஆரத்தி எடுத்தனர்.
இந்து மகாசபையின் தேசிய துணைத்தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் கூறும்போது, " நாட்டின் விடுதலை போராட்டத்தில் இந்த 2 தலைவர்கள் வழங்கிய பங்களிப்பை மக்கள் மறந்துவிட்டனர். அவர்களது நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. கோட்சே கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தை பள்ளி பாடத்தில் சேர்க்க வேண்டும் என்று முதல்-முதல்வருக்கு மனு கொடுத்துள்ளோம்" என்றார்.