மிசோரம் மாநிலத்தில் கடந்த தேர்தலில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவானதை அடுத்து தற்போது இம்மாநிலத்தில் முதற்கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்நிலையில் "இளம் வாக்காளர்களை" கவரும் வகையிலும் , வாக்கு பதிவுகள் அதிகரிக்கும் வகையிலும் மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி நேற்று தனது மாநில தேர்தல் டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி குறிப்பை வெளியீட்டார்.
இதில் மிசோரம் மாநில மக்கள் தேர்தல் நாளான ஏப்ரல் 11 தேதி அன்று "வாக்களித்த பின் மை விரலுடன்" தனியாகவோ அல்லது குழு புகைப்படமாகவோ எடுத்து "மிசோரம் தேர்தல் அதிகாரி" டிவிட்டர் பெயரை டேக் செய்தும் #Mizoramelections , #Mizoramvoters என்ற பெயரை ஹேஸ்டேக் செய்து புகைப்படத்தை பதிவிட வேண்டும் என்றும் , அவ்வாறு செல்பி புகைப்படத்தை பதிவிடும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ரூபாய் 7000 ஆகவும் , இரண்டாம் பரிசாக ரூபாய் 3000, மூன்றாம் பரிசாக ரூபாய் 3000 வழங்கப்படும் என மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் "மை விரலுடன்" எடுக்கப்படும் செல்பி புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பிலும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாட்ஸ் ஆப் எண் (Whatsapp) : 90893-29312. அதனை தொடர்ந்து செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம் மாநிலம். இந்த மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி உள்ளது. இது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும். இந்த தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரியின் முடிவு அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் மக்களை வியப்படைய செய்துள்ளது. எனவே இந்த பரிசு போட்டியை இந்திய தேர்தல் ஆணையம் கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.சந்தோஷ் , சேலம் .