Skip to main content

மன அழுத்தத்தால் தற்கொலை? - சர்ச்சை சாமியாரின் சர்ச்சை மரணம்

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

சர்ச்சைக்குரிய சாமியார் பைய்யூ மகராஜ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


baiyuu

 

 

 

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் உதய்சிங் தேஸ்முக் (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள சில்வர் ஸ்பிரிங் என்னுமிடத்தில் ஆசிரமம் ஒன்றை அமைத்து, பைய்யூ மகராஜ் என்ற பெயரில் சாமியாராகவும், ஆன்மிக தலைவராகவும் வலம்வந்தார். இந்நிலையில், சாமியார் மகராஜ் அறையில் பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து, சீடர்கள் சென்று பார்த்தபோது பைய்யூ மகராஜ் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சுருண்டு கிடந்த மகராஜை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன. 
 

பைய்யூ மகராஜ் இறப்பதற்கு முன்னதாக எழுதியிருந்த கடிதத்தில், ‘யாராவது என் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். நான் அதிகப்படியான மன அழுத்தத்தில் இருக்கிறேன். விரக்தியடைந்ததால் இந்த முடிவை எடுக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இன்னொரு சர்ச்சைக்குரிய சாமியாரான கம்ப்யூட்டர் பாபா இந்த மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. விசாரணை நடத்தவேண்டும் என தெரிவித்திருக்கிறார். 
 

 

 

அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோரைக் கையில் வைத்திருந்த பைய்யூ மகராஜ், சமீபத்தில் மத்தியப்பிரதேசம் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வழங்கிய அமைச்சர் பதவியை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்