நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நேரலையில் உரையாற்றினார். அப்போது இந்தியா நடத்திய புதிய விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கூறினார்.

அவர் பேசுகையில், "விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது. விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றியடைந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா மட்டுமே விண்வெளித்துறையில் இந்த சாதனையை படைத்துள்ளது. நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. மேலும் விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் இந்த சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்தது" என கூறினார்.