Published on 26/08/2018 | Edited on 26/08/2018

வரும் செப்டெம்பர் 1 முதல் தெலுங்கானாவில் உள்ள அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படுவதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் மசூதிகளில் பணியாற்றும் இம்மாம்களுக்கும் ஊதியம் 1500 ரூபாயிலிருந்து 5000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.