Skip to main content

உயரும் ரீசார்ஜ் கட்டணம்; பிள்ளையார் சுழி போட்ட ஜியோ

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Rising recharge charges;jio announce

மாதாந்திர கட்டணத்தை உயர்த்தி செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி கடந்த 9ஆம் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் 24-06-24 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பின் முதலாவது முறையாக ஜியோ நிறுவனம் தங்களுடைய செல்போன் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 முதல் 25% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ரூபாய் 155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 189 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ தற்போது தனது சேவை கட்டணத்தை அதிகரித்து பிள்ளையார் சுழிபோட்ட நிலையில் அடுத்தடுத்து செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் கட்டணமும் உயர்வு!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Airtel rate hike after Jio

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஜியோ நிறுவனம் தங்களுடைய செல்போன் கட்டணத்தை உயர்த்தி நேற்று (27.06.2024) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 முதல் 25% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி ரூபாய் 155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 189 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. ஜியோவின் இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. ஜியோ நிறுவனம் தனது சேவை கட்டணத்தை அதிகரித்து பிள்ளையார் சுழிபோட்ட நிலையில் அடுத்தடுத்து செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் ரீ - சார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 3 முதல் இந்த புதிய கட்டணங்கள் அமலுக்கு வர உள்ளன. அதன்படி ப்ரி - பெய்டு, போஸ்ட் பெய்ட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வின் படி மாதாந்திர ரீ - சார்ஜ் கட்டணம் ரூ. 20 உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மாதாந்திர ரீ - சார்ஜ் கட்டணம் ரூ. 179 ரூபாயிலிருந்து ரூ. 199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தினசரி குறைந்தபட்சம் ஒரு ஜி.பி. டேட்டாவுடன் கூடிய மாத ரீ - சார்ஜ் ரூ. 265 இலிருந்து ரூ. 299 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தினசரி 2 ஜி.பி. டேட்டாவுடன் கூடிய வருடாந்திர ரீ - சார்ஜ் தொகையானது ரூ. 600 அதிகரிக்கப்பட்டு ரூ. 3599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.