Published on 30/09/2022 | Edited on 30/09/2022
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் உயர்த்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.4 சதவிகிதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி கந்ததாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 5 மாதங்களில் 4 ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பால் வீடு, வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதி மேலாண்மை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.