Skip to main content

பாஜக வெளியிட்ட அறிவிப்பு; சொகுசு விடுதியில் நடனமாடி கொண்டாடிய எம்எல்ஏக்கள்!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

கதச

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தனர். கூட்டணி அரசு இரண்டரை ஆண்டுகளைக் கடந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார். 35க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் சொகுசு விடுதியில் முகாமிட்டு கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். 

 

இதற்கிடையே முதல்வர் பொறுப்பிலிருந்து  உத்தவ் தாக்கரே விலகிய நிலையில் பாஜக மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் புதிய முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே இன்று பொறுப்பேற்க உள்ளதாக பாஜக மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான பட்னாவிஸ் இன்று மாலை அறிவித்தார். இதற்கிடையே இந்த செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு விடுதியில் உற்சாக மிகுதியில் நடனமாடி மகிழ்ந்தனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்