இந்திய குடியரசு தலைவர் பயணிக்கவிருந்த விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு குறித்து விசாரிக்க ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறை சுற்றுப்பயணமாக ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். இதில் முதலில் சுவிட்சர்லாந்து சென்ற அவர், அந்நாட்டுப் பயணத்தை முடித்து ஸ்லோவேனியா செல்ல தயாரானார். ஆனால் அவர் புறப்படும் நேரத்தில், அவர் செல்லவேண்டிய போயிங் 747 ரக விமானத்தில் சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மீண்டும் ஓட்டல் அறைக்கு திருப்பினார். பின்னர் 3 மணிநேரம் கழித்து கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார். இந்நிலையில் இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக விசாரணை நடத்த ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.