Skip to main content

கரோனா தடுப்பூசி தொடர்பாக போலி செயலிகள்! - சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

health ministry

 

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடுப்பூசிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.

 

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, கரோனா தடுப்பூசி செலுத்துவதை கோ-வின் (coWIN) என்ற செயலி மூலம் ஒருங்கிணைப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கோ-வின் என்ற பெயரில் சில செயலிகள், ஆப் ஸ்டோர்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன.

 

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை, இதுதொடர்பாக எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "விரைவில் வரவிருக்கும் அரசாங்கத்தின் செயலியான கோ-வின் போலவே, அதேபெயரில், சில நேர்மையற்ற சக்திகளால் உருவாக்கப்பட்ட செயலிகள், ஆப் ஸ்டோர்களில் உள்ளன. அதை பதிவிறக்கம் செய்யவோ, அதில் தனிப்பட்ட விவரங்களை பகிரவோ வேண்டாம். சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வத் தளம் பயன்பாட்டிற்கு வருகையில், அது போதுமான அளவு விளம்பரப்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்