ரயில்வே பணிகளுக்கான தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெறுவதாக ரயில்வே தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
ரயில் பாதைப் பராமரிப்பு பணியாளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பதவிகளுக்கான காலியிடங்களுக்கு, கடந்த 2019- ஆம் ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்காக, மூன்று கட்டத் தேர்வுகள் நடைபெற்ற நிலையில், வரும் செப்டம்பர் 19- ஆம் தேதி முதல் நான்காம் கட்ட தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் தேர்வு எழுதும் நிலையில், அதனை நடத்தி முடிக்க அனுபவம் வாய்ந்த நம்பிக்கையான ஒரு பெரிய நிறுவனத்தை ரயில்வே தேர்வாணையம் நியமித்துள்ளது.
முறைகேடுகளைத் தடுக்க கேள்வித்தாளை வேறு எவரும் அணுகாத எண்ணம், 256 அளவு இலக்க கணினி குறியீட்டில் சேமிக்கப்படுகிறது. மேலும், தேர்வுகள் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது. ஆள்மாறாட்டத்தைத் தவிர்க்க ஆதார் அட்டையுடன் கூடிய கைரேகை சோதனையும் நடத்தப்படுகிறது.
முறைகேடுகளில் ஈடுபட முயன்ற 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.