Published on 01/03/2021 | Edited on 01/03/2021
![rahul gandhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/kzVfp8bswAdhyLP6RJqPinUWW722mDdYPLwoRyb1bEo/1614585910/sites/default/files/inline-images/RG_1.jpg)
இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையோடு, கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மூன்றுமுறை கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வைக் கண்டித்து, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்தநிலையில் தற்போது, கேஸ் சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எல்பிஜி சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வியாபாரத்தை மூடுவது, அடுப்பிற்குத் தீ வைத்துவிடுவது, வெற்று வாக்குறுதிகளைச் சாப்பிடுவது. இதுவே மோடி அரசு மக்களுக்குத் தரும் வாய்ப்புகள்’ எனத் தெரிவித்துள்ளார்.