Skip to main content

மகளிர் தினத்தில் 'உலகின் சிறந்த தாய்' என்ற விருதை பெற்ற ஆண்...

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

2016 ஆம் முதல் டவுன் சின்ட்ரோம் பாதிக்கப்பட்ட குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வரும் புனேவை சேர்ந்த ஆதித்யா திவாரி என்பவருக்குச் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "உலகின் சிறந்த தாய்" எனும் விருது வழங்கப்பட்டது.

 

Pune Man got Best Mommy Of The World award

 

 

தனித்து வாழ்ந்து வந்த ஆதித்யா திவாரி, ஒன்றரை ஆண்டுக்காலம் பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு டவுன் சின்ட்ரோம் பாதிக்கப்பட்ட அவ்னிஷ் என்ற குழந்தையைத் தத்தெடுத்துள்ளார். சிறுவனைத் தத்தெடுத்த பின் ஐ.டி துறையில் பணியாற்றி வந்த ஆதித்யா, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரமாகக் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மேலும், மன வளர்ச்சி குன்றிய சிறுவர்களைப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தி வருகிறார். அதேபோல பெற்றோர்களுக்கும் குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

அவரின் இந்த பணிகளைப் பாராட்டும் விதமாக, ஐ.நா. சபையின் சார்பில் மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளைப் பராமரித்து வளர்ப்பது குறித்த கருத்தரங்கிலும் ஆதித்ய திவாரி கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "உலகின் சிறந்த தாய்" எனும் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து பேசியுள்ள அவர், "ஒன்றரை வருடப் போராட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 1, 2016 அன்று அவ்னிஷின் சட்டக் காவலைப் பெற்றேன். அதன் பின்னதான எங்கள் பயணம் மிகவும் அற்புதமானது. அவன் கடவுளிடமிருந்து எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்றாகும். அவனைப் பெற்றதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஒரு பெற்றோராக எப்படி மாற வேண்டும் என்று அவ்னிஷ் எனக்குக் கற்றுக் கொடுத்தான். ஒரு பெண்ணால் மட்டுமே ஒரு குழந்தையைக் கவனித்துக்கொள்ள முடியும் என்ற ஸ்டீரியோடைப் காரணமாக நான் தத்தெடுப்பின் போது நிறையச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனது வாழ்வின் மிகசிறந்த பகுதி என்னவென்றால், அவ்னிஷ் என்னை அவனது பெற்றோராக ஏற்றுக்கொண்டதுதான்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்