
புதுச்சேரியில் நேற்று 3,541 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில், 512 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் புதுச்சேரியில் இதுவரை 44,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41,268 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். தற்போது 2,594 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த் தொற்று காரணமாக இதுவரை புதுச்சேரியில் 693 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின் படி, புதுச்சேரியில் 100- க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் திருவிழா தொடங்கியது. அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 100- க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.