![puducherry assembly election makkal needhi maiam candidates list](http://image.nakkheeran.in/cdn/farfuture/rrjQTraRKCtKxk42bYAf4DpGnycVSIOby6EmuhVclys/1615989854/sites/default/files/inline-images/Ewr45INUcAQqntd.jpg)
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
![puducherry assembly election makkal needhi maiam candidates list](http://image.nakkheeran.in/cdn/farfuture/x07_uNWYUgtqRo68q3sVhuLxeiT3Nd1qdtZBBVnOrxU/1615989868/sites/default/files/inline-images/kamal4523612.jpg)
இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 18 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த மார்ச் 12- ஆம் தேதி வெளியிட்டிருந்தார். அதையொட்டி, தற்போது 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மங்கலம் சட்டமன்றத் தொகுதியில் எம்.சுப்பிரமணி, பாகூர் சட்டமன்றத் தொகுதியில் தினேஷ், மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் கோபாலகிருஷ்ணன், ஊசுடு சட்டமன்றத் தொகுதியில் சங்கர், மணவெளி சட்டமன்றத் தொகுதியில் சுந்தராம்பாள், முத்தியால்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.