
கரோனா நோய்த்தொற்று காரணமாக, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தையும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (30/05/2022) காலை 11.00 மணிக்கு டெல்லியில் இருந்தவாறு காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள். மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவது சிறு ஆறுதலைத் தரும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டனர்.