இந்திய வங்கிகள் பலவற்றில் 9000 கோடிக்கு கடனை பெற்றுவிட்டு, அதை திருப்பி அளிக்காமல் லண்டனுக்கு ஓடிய விஜய் மல்லையா, நிதி அமைச்சரை சந்தித்துவிட்டுதான் லண்டன் சென்றேன் என்றார். அதன் பின் ராகுல் காந்தி, அருண் ஜெட்லி அவருக்கு சலுகை வழங்கியுள்ளார் என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையில் சுப்பிரமணியன் சுவாமி,” எப்படி அவருக்கு அளிக்கப்பட்ட லுக்கவுட் நோட்டீஸ் நீர்த்துப்போனது. அதாவது லுக்கவுட் நோட்டீஸில் அவரது நடமாட்டத்தை கண்காணித்தாலே போதும் என்று எப்படி மாறியது என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். இதற்கு சிபிஐ ஒரு பதிலை அளித்துள்ளது. அதில்,” மல்லையாவை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்தபோது அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. ஏனெனில் அவர், அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்தார். மேலும் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் இருந்தார். அதன் காரணமாகவே அவரை கைது செய்யுமாறு எந்த காவல் அமைப்பிடமும் நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆனால், அது தவறான முடிவாக மாறிவிட்டது” என்று தெரிவித்தது.
Mallya’s Great Escape was aided by the CBI quietly changing the “Detain” notice for him, to “Inform”. The CBI reports directly to the PM. It is inconceivable that the CBI, in such a high profile, controversial case, would change a lookout notice without the approval of the PM.
— Rahul Gandhi (@RahulGandhi) September 14, 2018
இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அதில், சிபிஐ விஜய் மல்லையா கேஸில் தடுத்து நிறுத்துவதில் இருந்து, அவரைப் பற்றின தகவல்கள் வெளியானாலே போதும் என்று மாற்றி உதவியிருக்கிறது. சிபிஐ பிரதமர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்தியாவிலேயெ மிகப்பெரிய பிரபலமானவர் வழக்கை, பிரதமரின் சமதம் இல்லாமல் எப்படி மாற்றியிருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.