Skip to main content

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார் இந்திய குடியரசுத் தலைவர்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

President participates in Queen Elizabeth's funeral!

 

கடந்த சனிக்கிழமை அன்று பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறப்பை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தில் புதிய மன்னர் ஆனார். இந்த நிலையில், இறுதிச் சடங்கு 10 நாட்களுக்குப் பின் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு 10 நாட்கள் அனுசரிக்கப்பட்டு, அவரின் உடல் செப்டம்பர் 19- ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையிலிருந்து பக்கிங்ஹாம் அரண்மனையைக் கடந்து, வின்ட்சர் கேஸ்டலுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பின்னர், கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே, ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இறுதிச் சடங்கில் உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அந்த வகையில், மூன்று நாள் பயணமாக வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி அன்று லண்டன் செல்லும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. 

 

குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக திரௌபதி முர்மு பிரிட்டன் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்