நான்கு மாத குழந்தையை வெளியே பார்த்துகொள்ள சொல்லிவிட்டு, தேர்வு எழுத சென்ற தாய். அப்போது கதறி அழுத குழந்தையை மடியில் வைத்து சாமாதானம் செய்த போலிஸின் புகைப்படம் வைரலாகி எல்லோரின் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் போலிஸுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியத்தோடு கையில் நான்கு மாத குழந்தையுடன் பெண் ஒருவர் வந்துள்ளார். குழந்தையை பார்த்துகொள்வதற்காக தன்னுடன் 14வயது சிறுமியையும் உடன் அழைத்துவந்துள்ளார். தேர்வுக்கு உள்ளே சென்று, எழுத தொடங்கியுள்ளார். அப்போது, அந்த குழந்தை கதறி அழ தொடங்கியுள்ளது. பார்ட்துகொள்ள அந்த சிறுமி இருந்தாலும் அழுதுகொண்டே இருந்துள்ளது. உடனடியாக அருகில் இருந்த காவலர் ஒருவர், அந்த குழந்தையை கையில் வாங்கி, சமாதானம் செய்துள்ளார். தேர்வு எழுத சென்ற பெண் திரும்பும் வரையில் அந்த குழந்தையை பக்குவமாக கவணித்துவந்துள்ளார். இதை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இதை வைரலாக்கினர்.
குழந்தையை கவனித்துக்கொண்டவரின் பெயர் முஜீப் அர் ரஹ்மான், மஹ்பூபாநகர் மாவட்டத்திலுள்ள மூசபெட் காவல் நிலையத்தில் வேலை செய்கிறார். 48வயாதாகும் இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.