Skip to main content

"மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்"- பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

pm narendra modi discussion with officers coronavirus prevetion and vaccine

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. 

 

இந்த நிலையில் டெல்லியில் இருந்தவாறே பிரதமர் நரேந்திர மோடி இன்று (17/04/2021) இரவு 08.00 மணிக்கு மத்திய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கரோனாவைக் கட்டுப்படுத்த மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மருந்துகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதைப் பூர்த்தி செய்ய முழு திறனையும் பயன்படுத்த வேண்டும். கடந்த ஆண்டைப் போல ஒருங்கிணைந்து செயல்பட்டு கரோனாவைத் தோற்கடிப்போம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்