Published on 07/06/2021 | Edited on 07/06/2021

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (07.06.2021) மாலை ஐந்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். இதனை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இருப்பினும் அதற்கான காரணம் கூறப்படவில்லை. நாட்டில் நிலவும் கரோனா நிலை குறித்து பிரதமர் மோடி உரையாற்றலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்போது தினசரி கரோனா பாதிப்பு குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் தினசரி 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தினசரி பாதிப்பு ஒரு லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.