Skip to main content

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

தேர்தல் பிரசாரத்தின்போது, பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கொடிகள், பேனர்கள், பிளெக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் முடிந்த பிறகு அவை கழிவுகளாக குவிந்துவிடுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, தேர்தல் பிரசாரத்தின்போது, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுமையாக தடை விதிக்க அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு வில்சன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். 


இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு, தேர்தல் பிரசாரத்தின்போது, குறிப்பாக, பேனர், விளம்பர பலகை போன்றவற்றில், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தேர்தல் கமிஷனும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் எடுத்திருப்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். ஆகவே, இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை தேர்தல் ஆணையத்துக்கும், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
 

 

சார்ந்த செய்திகள்