Skip to main content

ஊடக வெளிச்சத்திற்காகவே விவசாயிகள் போராடுகின்றனர்! - விவசாயத்துறை அமைச்சர்

Published on 03/06/2018 | Edited on 03/06/2018

ஊடக வெளிச்சத்திற்காகவே விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபடுவதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.
 

Radha

 

விவசாயக்கடன் தள்ளுபடி, குறைந்த பட்ச ஆதார விலை, நியாயமான விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அனைத்து இந்திய விவசாயிகள் சபை மற்றும் ராஷ்டிரிய கிஷான் மகா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பால், காய்கறிகள் மற்றும் விவசாயப் பொருட்களின் சப்ளையை விவசாயிகள் அம்மாநிலம் முழுவதும் நிறுத்தி வைத்துள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வருகின்றனர். 
 

விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசியுள்ள மத்திய விவசாயத்துறை அமைச்சர், ‘எந்த விவசாய சங்கமாக இருந்தாலும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் உறுப்பினர்கள் அங்கமாக இருப்பது சகஜம்தான். அவர்கள் வழக்கத்திற்கு மாறான விஷயங்களைச் செய்து ஊடக வெளிச்சத்தைப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கும்போது, சில ஆயிரம் பேர் மட்டுமே போராட்டம் நடத்துவது சம்மந்தமில்லாததாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசம் மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் இந்தப் போராட்டங்கள் தேவையற்றவை என கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்