பஞ்சாப் மாநில காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கேப்டன் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
அதன்படியே அண்மையில் தனது புதிய கட்சியின் பெயரை கேப்டன் அமரீந்தர் சிங் வெளியிட்டார். இதற்கிடையே புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்தே, விவசாயிகளுக்குச் சாதகமாக வேளாண் சட்ட பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்தால் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு செய்துகொள்ளத் தயார் என கூறியிருந்தார்.
இந்தநிலையில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து கேப்டன் அமரீந்தர் சிங், பாஜகவுடன் தொகுதி பங்கீடு செய்துகொள்ள 110 சதவீதம் திட்டம் வகுக்கப்படும். விவசாயிகளும் இந்த போராட்டத்தில் இணைய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பாஜக தேசிய செயற்குழுவில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநில பாஜக தலைவர், அனைத்து தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிட தயாராகி வருகிறது என்றும், மற்ற கொள்கை முடிவுகளைக் கட்சியின் பாராளுமன்ற குழு முடிவு செய்யும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.