Published on 10/11/2023 | Edited on 10/11/2023

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ஹெச்.சி. மகாதேவாப்பா என்பவர் சமூக நலத்துறை அமைச்சராக உள்ளார். அண்மையில் தார்வார் மாவட்டத்தில் உள்ள மாணவர் விடுதி ஒன்றுக்கு ஆய்விற்காகச் சென்றுள்ளார். அங்கு மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவின் தரம் குறித்து அங்குள்ள சமையல் அறைக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.
உள்ளே செல்லும் பொழுது காலணியை கழட்டி விட்டுச் சென்ற அமைச்சர், ஆய்வுக்குப் பிறகு வெளியே வந்தார். அப்பொழுது அவருடைய பாதுகாவலர் ஒருவர் அமைச்சருக்கு காலணியை மாட்டிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சமூக நலத்துறை அமைச்சரே இப்படி நடந்து கொள்ளலாமா எனக் கண்டனங்கள் எழுந்து வருகிறது.