கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 5-வது ஆண்டாக நேற்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடந்த மாபெரும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதுபோல உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிலையில் அமித்ஷா பங்கேற்ற யோகா நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கு யோகா செய்ய பயன்படுத்தப்பட்ட தரை விரிப்புகளை அங்குள்ள மக்கள் எடுத்து செல்ல முயற்சித்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான விரிப்புகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெவ்வேறு திசைகளில் சென்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பாதுகாவலர்களும் திணறினர்.
அப்போது ஒரு சிலர் தங்களை தடுத்து நிறுத்திய ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் நாட்டின் உள்துறை அமைச்சரும், பாஜகவின் தலைவருமான அமித்ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
#WATCH Haryana: A pandemonium broke out in Rohtak after people looted yoga mats from the venue where Union Home Minister Amit Shah & CM ML Khattar had participated in the programme for #InternationalDayofYoga earlier today. pic.twitter.com/8ZVjJZOh74
— ANI (@ANI) June 21, 2019