Published on 15/03/2019 | Edited on 15/03/2019
நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2.93 சதவீதமாக உயர்ந்துள்ளதென மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பொருள் மொத்த சில்லரை பணவீக்கம் 2.74 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வால் பணவீக்கமும் அதிகரித்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
2019-ம் ஆண்டு ஜனவரியில் பணவீக்கம் 2.76 சதவீதமாக இருந்தது. உருளை, வெங்காயம், பழங்கள் மற்றும் பால் பொருள்களின் விலை 4.84 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3.54 சதவீதமாக இருந்தது.
குறிப்பாக எரிபொருள், மின்சாரத்தைப் பொறுத்தவரை 2.23 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஜனவரியில் 1.85 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.