வங்கிகடன் மோசடி வழக்கில் லண்டன் நீதிமன்றம் மல்லையாவை நாடுகடத்த அனுமதியளித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திரும்ப செலுத்தாத புகாரில் சிக்கிய விஜய் மல்லையா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பி லண்டனுக்கு சென்றார். விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கு உத்தரவு பிரிட்டன் வெளியுறவு அமைச்சருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவர் சொத்துக்களும் முடக்கப்பட்டது. அண்மையில் அவர் கடனை செலுத்த தயார் ஆனால் அசலை மட்டும் முதலில் செலுத்துவதாகவும் வட்டி தொகை செலுத்துவதில் பேசிமுடிவெடுக்கலாம் என கூறியிருந்தார். அதேபோல் அவர் நாடு கடத்தப்பட்டால் மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்படலாம் என்ற அடிப்படையில் அந்த சிறையில் உள்ள வசதிகள் குறித்த வீடியோவும் லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று நடந்த விசாரணையில் இந்த வழக்கின் மீது மல்லையா மேல்முறையீடு செய்யாவிடில் 28 நாட்களுக்குள் அவரை நாடுகடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோல் விஜய் மல்லையா இந்த வழக்கில் மேலுறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளது. விஜய் மல்லையா மேலுறையீடு செய்யாமல் இருந்து நாடுகடத்தப்பட்டால் அவர் மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.'
இந்த தீர்ப்பிற்கு சிபிஐ வரவேற்பு தெரிவித்துள்ளது.