Published on 20/05/2018 | Edited on 23/05/2018

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனியை பலரும் தல என்று கூறிவரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடிகர் அஜீத்குமார் அண்ணாதான் உலகத்துக்கே ஒரே தல. மற்ற அனைவருமே அவருக்கு கீழ்தான் என்று வீடியோ பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியொ பதிவில் அவர் மேலும், ’’தோனி கூல் கேப்டன். மற்றபடி, தோனியை தல என்று எல்லோரும் சொல்லி வருகிறார்கள். ஆனால், எல்லோருக்கும் தெரியும். உலகத்திற்கே ஒரே தல அஜீத்குமார் அண்ணாதான். மற்றவர் எல்லோமே அவருக்கு கொஞ்சம் கீழேதான்’’என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசாந்த்தின் இந்த வீடியோ பதிவினால் தோனி ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்து வருகின்றனர்.