தில்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அம்மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி அங்கு வரும் 8ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அனைத்து கட்சிளும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு ஆளும் ஆம் ஆத்மி கட்சி தங்களுடைய தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புக்களை அக்கட்சி கூறியுள்ளது. அதில் முக்கியமானதாக அனைவராலும் பேசப்படுவது, துப்புறவு தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி வழங்கப்படும் என்பதுதான். இது மக்களை ஏமாற்றும் அறிவிப்பு என்று அம்மாநில எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளார்கள்.