கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்தினா தகுதி பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கனமழையால் எதிர்பாராத வகையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது.
அப்பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ 1 கோடி நிவாரண நிதியை வழங்கும் நிகழ்ச்சி திருவனந்தபுரம் கேரளா முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி ரூ.1 கோடி நிவாரண நிதியை காசோலையாக கேரளா முதல்வர் பிரனாய் விஜயனிடம் வழங்கினார். இவருடன் நிறுவன மின்துறை இயக்குனர் வெங்கடாசலம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த ராமானுஜம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிவாரண நிதி வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களின் மறுவாழ்வு மற்றும் மறு சீரமைப்பு முயற்சிகளுக்கு உதவிக்கரமாக அமையும் என்பதற்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து என்.எல்.சி இந்தியா தலைவர் கேரளா முதல்வரிடம் விளக்கிக் கூறியதாக தெரிவித்துள்ளார்.