Skip to main content

மாறுவேட எம்பியின் புதிய தோற்றம் ...

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
narpalli

 

 

 

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி கடந்த பட்ஜெட் கூட்டத்தில் பல்வேறு விதமான போராட்டங்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே நடத்தினார்கள். அதில் நரமல்லி சிவபிரசாத் என்ற எம்பி, மாறுவேடப்போட்டியில் கலந்துகொண்டவர் போல விதவிதமான உடையணிந்து போராடினார். இவர் பெண், துணி வெளுப்பவர், பள்ளிச்சிறுவன், மன்னர் போன்ற மாறுவேடங்கள் போட்டு போராடினார்.

 

 

 

நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்பு போலவே, தெலுங்கு தேச கட்சியினர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வைத்து நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடி வருகின்றனர். இன்று நடைபெற்ற போராட்டத்தில் நரமல்லி சிவபிரசாத்சுதந்திர போராளி உய்யலவாடா நரசிம்ம ரெட்டி போல் உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்று அன்னமயா என்னும் பிரபல கவிஞரை போன்று உடையணிந்து போராட்டம் நடத்தினார்.  

      

சார்ந்த செய்திகள்

Next Story

சந்திரபாபு நாயுடுவின் வீடு இடிக்கும் பணிகள் தொடங்கியது...அதிர்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்படும் எனக் கூறி அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் 2016-ம் ஆண்டு முன்னதாக தான் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி அந்த வீட்டில் குடியேறினார். அந்த வீட்டின் அருகில் ரூபாய் 5 கோடி செலவில் 'பிரஜா வேதிகா' என்ற மற்றொரு புதிய கட்டிடத்தையும் கட்டி கட்சியினரைச் சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் மற்றும் அமைச்சரவை கூட்டங்கள் நடத்தவும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார். அவர் அங்கு கட்டிடம் கட்டும் போதே அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 

 

 

AP FORMER CM CHANDRABABU NAIDU HOME DISPOSED

 


கடந்த மாதம் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. அம்மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி அம்மாநிலத்தில் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். புதிதாக பதவியேற்றுள்ள அரசுக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் "பிரஜா வேதிகா" இல்லத்தை தானே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஆந்திர அரசு ஏற்க மறுத்துவிட்டது.

 

AP FORMER CM CHANDRABABU NAIDU HOME DISPOSED

 

 

"பிரஜா வேதிகா" கட்டிடம் சட்ட விதிகளை மீறி முறையில்லாமல் நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது என்பதால் அதை இடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார். இதையடுத்து, கட்டிடத்தை இடிக்கும் இன்று பணி தொடங்கியது. ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். இதனால் வெளிநாட்டில் உள்ள சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

 

 

Next Story

தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்கள் பாஜகவுக்கு தாவல்?

Published on 20/06/2019 | Edited on 20/06/2019


ஆந்திர மாநிலத்தில் நடந்த மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிப் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் டெல்லியில் தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவர்களான நான்கு ராஜ்யசபா எம்.பிக்கள் பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பாஜகவிற்கு செல்ல தயாராகிவிட்டனர்.

 

 

TELUGU DESAM PARTY RAJ SABHA MPS JOIN IN BJP PARTY

 

 

 

முதல் கட்டமாக ராஜ்யசபா எம்.பிக்களான சுஜானா சவுத்ரி, சி.எம். ரமேஷ், ஜி. மோகன் ராவ், டி.ஜி. வெங்கடேஷ் ஆகியோர் பாஜகவுக்கு தாவுவது உறுதியாகி உள்ளது. இவர்கள் 4 பேரும் இன்று அமித்ஷாவை சந்தித்து பேசி பாஜக கட்சியில் இணைய தயாராகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் சுஜானா சவுத்ரி மீது அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 4 பேரும் இன்று துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவையும் நேரில் சந்தித்து ராஜ்யசபாவில் தங்களை தனி அணியாக அங்கீகரிக்கக் கோரி மனு அளிக்க உள்ளனர்.

 

 

TELUGU DESAM PARTY RAJ SABHA MPS JOIN IN BJP PARTY

 

 

ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்துடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு இந்த செய்தி பேரதிர்ச்சியை தந்துள்ளது. இதேபோல் எம்.எல்.ஏக்களும் கட்சி தாவினால் தெலுங்குதேசம் கட்சியே இரண்டாக பிளவுபடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தெலுங்குதேசம் கட்சியில் சந்திரபாபு நாயுடுவின் மகனும் பொதுச்செயலாளருமான லோகேஷுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்ததில் கட்சியின் மூத்த தலைவர்கள். எம்.எல்.ஏக்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் பாஜக கட்சி காலூன்ற தேவையான நடவடிக்கைளை அக்கட்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு மொத்தம் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ள நிலையில், நான்கு எம்பிக்கள் பாஜக கட்சிக்கு தாவவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.